ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு!

Date:

தொழிற்சங்கவாதியும் ஆசிரியர் சங்கத்தலைவருமான ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சிறிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஸ்டாலினை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஸ்டாலினிடம் கூறினார்.

மேலும், முறைமை மாற்றத்தை வலியுறுத்தும் அரகலய உறுப்பினர்களை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தில் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உள்ளது, அதில் உள்ள நல்ல அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.

இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்படுவார் என எதிர்கட்சியான ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...