டீசல் நெருக்கடியால் பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்கள் முடங்கியுள்ளன!

Date:

தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான டீசல் கையிருப்பு உரிய முறையில் கிடைத்தால் மட்டுமே நாளை தனியார் பேருந்துகளை இயக்க முடியும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனியார் பேருந்துகளுக்கு  இ.போ.ச டிப்போ மூலம் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும், டிப்போக்களினால் எரிபொருள் வழங்கப்படுவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று தேவையான அளவு டீசல் கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

இ.போ.ச டிப்போவின் டீசல் விநியோகமும் தற்போது செய்யப்படுவதில்லை என அதன் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு  டிப்போ டீசல் வழங்காமைக்கான காரணம் ஆர்டர் செய்யப்பட்ட டீசல்  டிப்போவில் இதுவரை கிடைக்கவில்லை என அதன் பிரதிப் பொது முகாமையாளர் ரன் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாளைய தினம் இ.போ.ச பஸ்கள் வழமையாக இயங்குவதற்கு தேவையான டீசல் கையிருப்பு லங்காம டிப்போவில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்   தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...