தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படும் என்ற அங்கீகாரம் சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும்: வடிவேல் சுரேஷ்

Date:

தமிழில் தேசிய கீதம் தேசிய நிகழ்வுகளில் பாடலாம் என்ற அங்கீகாரத்தை வழங்கி சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமையை அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகள் சமூகத்தில் பிணக்குகளை உண்டாக்குமோ என்ற ஐயமும் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது, பசறை மடுல்சீமை பெருந்தோட்டங்களில் தொழிற்சாலைகளில் கடமை புரிந்து வந்த பாதுகாப்பு தொழிலாளர்களை இடைநிறுத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளுக்காக நியமித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 200 வருடகாலமாக காடுகளாக இருந்த நிலத்தை பதப்படுத்தி பொன் விளையும் பூமியாக மாற்றியது நம் மலையக மக்களே அவ்வாறு இருக்க இத்தகைய செயற்பாடுகள் நகைச்சுவையாகவே இருக்கின்றது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் இத்தகைய செயற்பாடுகள் கீழ்தரமானவை இவற்றின் காரணமாக தொழில் இழப்பு மட்டுமின்றி சமூக ரீதியான பிணக்குகளும் ஏற்படுகின்றது.

அரசாங்கத்திற்கு அடிபணியாது பெருந்தோட்ட நிறுவனங்களின் இத்தகைய தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் பெருந்தோட்ட மலையக மக்களிடையே பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.

அத்தோடு 1992 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இன்றுவரை பெருந்தோட்ட தொழிற்சாலைகள் பல மூடுவிழா கண்டுள்ளது. இன்று லுனுகல சோலன்ஸ் பெருந்தோட்ட பகுதி தொழிற்சாலையை மூடுவதற்கு தோட்ட நிர்வாகம் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றது.

வெளிமடை ஊவா பெனட்டில் ஒரு வீடு முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டு அங்கே ஒரு பிணக்கு ஏற்பட்டுள்ளது அத்துடன் வெலிமட வார்விக் பிரதேசத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்த காணியை பெருந்தோட்ட நிறுவனம் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி மீள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு பல பிரச்சனைகள் பெருந்தோட்ட மலையகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது பெருந்தோட்ட நிறுவனங்களில் இத்தகைய அசமந்தப் போக்கு சமூகத்தில் பிணக்குகளை தோற்றுவிக்கும் பெருந்தோட்ட மலையக மக்களை பிழையாக வழி நடத்தி அவர்களை வஞ்சிக்கும் செயற்பாடுகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடுவதை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேற்கண்ட செயல்பாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட மலையக மக்களும் தொழிற்சங்க அரசியலுக்கு அப்பால் ஒற்றுமையாக செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்வதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...