தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்குமாறு வடிவேல் சுரேஷினால் கடிதம்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய அமைச்சின் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் எச்.ஜி.வசந்த குணவர்தன தொழில் அமைச்சின் செயலாளர்  ஆர்.பி.ஏ விமலவீர தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் சுஜித் சஞ்சய பெரேரா சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய வாழ்க்கை பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேதனத்தை 3250 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இக்கடிதத்தை ஏற்று உடனடியாக சம்பள நிர்ணய சபையினை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர்.

வழமை மாறாத சலுகைகள் உடனேயே வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதியாக இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...