நாளைய தினம் 90வீத தனியார் பஸ்கள் இயக்கப்படும்: கெமுனு

Date:

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் 10,000 முதல் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹக்மன, தெனிய, திக்வெல்ல, ஹம்பாந்தோட்டை, மித்தெனிய, சூரியவௌ, திஸ்ஸமஹாராமய, பெலியஅத்த போன்ற பல கிராமப்புறங்களில் பேருந்துகளை இயக்குவது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக கெமுனு தெரிவித்தார்.

எரிபொருள் பெறுவதற்கு 40 கிலோமீற்றர் தூரம்  செல்ல வேண்டியிருப்பதால் இப்பகுதிகளுக்கு ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

‘மேல் மாகாணத்தில் பாடசாலை பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மற்ற பகுதிகளில், பாடசாலைகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் சாதாரண கட்டணத்தில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...