பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் , பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு ஏற்றி வந்த லொறி மீது எதிர்திசையில் 18 பேருடன் வந்த பஸ் மோதியது.
இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வீதியில் தேங்கியிருந்த மழைநீரால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.