பாகிஸ்தான் வெள்ளம்: அனைத்துலகமும் தாராளமாக நன்கொடை அளிக்க முன்வருமாறு இம்ரான் கான் கோரிக்கை!

Date:

பாகிஸ்தானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் சிந்துவில் 347, பலோசிஸ்தானில் 238, கைபர் பக்துன்க்வாவில் 226, பஞ்சாபில் 168, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 38 என 343 குழந்தைகள் உள்பட இதுவரை 1033 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 119 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் முதல் கட்ட வெள்ள நிவாரணத்துக்கு ஐநா நாளை ரூ.1,280 கோடி வழங்க உள்ளது. இங்கிலாந்தும் உதவுவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, துயரத்தில் இருக்கும் மனிதகுலம் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளது, அவர்களுக்கு உதவி செய்ய, இன்று இரவு 9:00 மணிக்கு சர்வதேச நிதி திரட்டும் தொலைத்தொடர்பு நிகழ்ச்சியை நடத்துகிறோம்  என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தாராளமாக நன்கொடை அளியுங்கள்:
1- பஞ்சாப் வங்கி
கணக்கு தலைப்பு: முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி 2022
கணக்கு எண்: 6010159451200028
IBAN: PK92BPUN6010159451200028

2- கைபர் வங்கி
கணக்கு தலைப்பு : முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி கைபர் பக்துன்க்வா
கணக்கு எண்: 2008365353
ஐபான்: PK32KHYB0015002008365353.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கையாள பொருளியல் உதவி தேவைப்படுவதாக  வெளியுறவு அமைச்சர் பிலவால் புட்டோ ஸர்தாரி   கூறியுள்ளார்.

அனைத்துலகப் பணநிதியம் உள்ளிட்ட நிதி நிலையங்கள் அதற்கு உதவும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

அங்கு ஏற்கனவே பொருளியல் நெருக்கடி  ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் நிலைமையை மோசமாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அனைத்துலகப் பணநிதியம் பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை வழங்குவது குறித்து இந்த வாரம் முடிவெடுக்கும்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...