பாராளுமன்ற நேர அட்டவணையில் மாற்றம்!

Date:

பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய பாராளுமன்றம் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதுடன், எதிர்க்கட்சி கொண்டுவரும் மின்சாரக் கட்டண அதிகரிப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை அன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லையாயின் அச்சட்டமூலம் குறித்த விவாதத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 30, 31, செப்டெம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...