மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடிப்படைத் தேவைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பி அடுத்த தலைமுறையை மௌனமாக்கும் போது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதம் ஏந்தி அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக இந்த உரிமையை பயன்படுத்துபவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.