QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி சேவைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல மாதங்களாக முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் வரிசையில் தங்கியிருந்ததுடன், இதன் காரணமாக அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து முச்சக்கர வண்டிகள் அதிகம் பயன்படுத்தப்படும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஒரு முச்சக்கர வண்டியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகத்திற்கான கோட்டா முறை ஆரம்பிக்கப்பட்டதாலும், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ததாலும், அவர்கள் மீண்டும் முச்சக்கர வண்டி சேவைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.