முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கும் எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷ அங்கு செல்லவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும், தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ரசாதா தனதிரெக், இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனவும் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேறியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி எந்தவொரு பொது தோற்றமோ அல்லது கருத்துக்களையோ வெளியிடவில்லை என்பதுடன் சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு எந்தவித சலுகைகளும், விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதேவேளை , முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 14 அன்று மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.