சீனாவை தாக்கும் புதிய வைரஸ் ‘லாங்யா’: 53 பேர் பாதிப்பு

Date:

கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாகவும், இன்றைய தினம் (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘லாங்யா’ என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ். இந்த வைரஸுக்கு மருந்தோ தடுப்பூசியோ உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

‘கொவிட்-19’ புதிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லாங்யா’ வைரஸ் பரவுவது சீனாவில் பதிவாகியுள்ளது.

‘கொவிட்-19’ வைரஸ் 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் தொடங்கியது.

சீனாவின் கிழக்கே ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் ‘லாங்யா’ வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிக காய்ச்சல், சோர்வு, இருமல், உணவின் மீது வெறுப்பு, தசைவலி, உடல்நலக்குறைவு, வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும் உடலில் ரத்த தட்டுக்கள் குறையும்.

கல்லீரலையும் சிறுநீரகத்தையும் செயலிழக்கச் செய்யக்கூடியது ‘லாங்யா’ வைரஸ் காணப்படுகின்றது.

தற்போது உலகம் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து கவலையில் இருக்கும் நிலையில், சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் ஆகிய இரு மாகாணங்களிலும் ‘லாங்யா’ நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸின் மரபணு வரிசைமுறை மற்றும் நோய்த்தொற்று வைரஸ் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த உள்நாட்டு ஆய்வகங்களுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறையை விரைவில் நிறுவவிருப்பதாக CDC துணை இயக்குனர்-ஜெனரல் சுவாங் ஜென்-ஹ்சியாங் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...