20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான போதைப்பொருள் விற்பனை செய்யவதற்கு தயாராகி வந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குடியிருப்பு தொகுதியின் மூன்றாவது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவரை சோதனைக்குட்படுத்திய போது சுமார் 83 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...