6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசாங்கம்!

Date:

பல சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் மீது இலங்கை அரசால் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அந்த வர்த்தமானியின் பிரகாரம், பயங்கரவாதம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்படுகிறது.

அதன்படி 6 சர்வதேச  தமிழ்  அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்கள் மீது இலங்கை அரசு விதித்திருந்த தடை நீக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

01. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
02. குளோபல் தமிழ் மன்றம்
03. உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு
04. திராவிட ஈழ மக்கள் காங்கிரஸ்
05. கனடிய தமிழ் காங்கிரஸ்
06. பிரித்தானிய தமிழர் மன்றத்தின் மீதான தடை நீக்கப்படும்.

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இந்தத் தடை விதிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளின் 4(7) கட்டளையின்படி இது நீக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...