6 தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியதற்காக தமிழ் கட்சிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு!

Date:

ஆறு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் மற்றும் அறுநூறு தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. கட்சி உட்பட பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதியின் இந்த முடிவை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களும் தனிநபர்களும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டிய சுமந்திரன், அந்த அமைப்புக்களும் தனிநபர்களும் எந்தவித விசாரணையும் இன்றி இலங்கையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.

மேலும் இந்தத் தடையை நீக்குவது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் ஆறு புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஈ.பி.டி.பி கட்சித்தலைவர் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்தவித தயக்கமும் இன்றி ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவை தெரிவிப்பதாக தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது தமது கட்சி ஜனாதிபதியிடம் முன்வைத்த 10 யோசனைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.

ஆறு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்த நாட்டில் வாழும் தமது உறவினர்களின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் இருப்பதாகவும், அதற்கான நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்குவது ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்கும் மேலும் புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடு செய்வார்கள எனவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்குகின்றது எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நெருக்கடியைச் சமாளிக்க ‘சுயநல நோக்கத்துடன்’ சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடையை ஜனாதிபதி நீக்கியுள்ளதாகவும், அந்த அமைப்புகள் அதை உணர வேண்டும் என்றும் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...