அமைதியான முறையிலும் ஒழுக்கத்துடனும் போராட்டம் நடத்திய ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடி உள்ளே வைத்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம், தற்போதைய வன்முறை அடக்குமுறையின் பிரதானி மஹிந்த ராஜபக்ஷவை ஏன் விட்டுச் சென்றார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலினை பார்ப்பதற்காக கொழும்பு கோட்டை பொலிஸாருக்கு விஜயம் செய்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டை நினைத்து மனித நேயத்தின் பெயரால் ஒன்றிணைந்து செயற்படும் மக்கள் எதேச்சதிகாரமாக அரசியல் வேட்டையில் ஈடுபட்டு இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தெரிவித்த கருத்தை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், தான் கைது செய்யப்பட்ட போது ஜி.எஸ்.பி சலுகை வழங்குவதாக கூறியிருந்தால் இன்று ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காதா என கேள்வி எழுப்பினார்.
வெடிகுண்டு, வாள், தோட்டா போன்ற ஆயுதங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடாது, பேச்சுவார்த்தை மூலமும் இணக்கப்பாட்டின் மூலமும் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுவரையில் தொடரும் வன்முறைச் சுழற்சியை ஆரம்பித்தவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எனவும் தெரிவித்தார். .
அத்தோடு, உழைக்கும் மக்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் போராடிய ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அடக்குமுறையின் தந்தை மகிந்த ராஜபக்ச தனது பொழுதைக் கழிக்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
எந்தவொரு குடிமகனுக்கும் தனது கருத்துக்காக நிற்கவும், சந்திக்கவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமை உண்டு என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அகிம்சை வழியில் போராடும் உரிமையை யாரும் மீற முடியாது என்றும் கூறினார்.
ஜோசப் ஸ்டாலின் தனது உரிமையை நாட்டின் நலனுக்காக ஜனநாயக ரீதியில் பயன்படுத்தினார் என்றும் அந்த உரிமையை எவராலும் எதிர்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.