இந்தியா 21,000 தொன் உரத்தை இலங்கைக்கு கையளித்தது!

Date:

சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், இந்தியா  21,000 தொன் உரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நெருக்கடி நிறைந்த விவசாயிகளுக்கு ஆதரவாக உரங்களை இந்தியா அனுப்புவது        இரண்டாவது முறையாகும்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில் நட்பு மற்றும் ஒத்துழைப்பை சேர்க்கும் வகையில், உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு இந்தியாவின் சிறப்பு ஆதரவின் கீழ் வழங்கப்பட்ட 21,000 தொன் உரங்களை முறையாக கையளித்தார்.

‘இந்த உரமானது உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும்.

இது இந்தியாவுடனான நெருக்கமான உறவுகள் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை வெளிப்படுத்துகிறது’ என்று உயர்ஸ்தானிகராலயம் மேலும் பதிவிட்டுள்ளது.

இலங்கையின் தேவைக்கு ஏற்ப பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் அதிக ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் யாழைப் பயிர்ச்செய்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை வழங்குவதாக மே மாதம் இலங்கைக்கு இந்தியா உறுதியளித்திருந்தது. இலங்கையில், நெல் வளரும் பருவம் மே முதல் ஆகஸ்ட் வரை இருக்கும்.

அதேநேரம் இந்திய அரசாங்கம் இந்த வருடத்தில் மட்டும் இலங்கை மக்களுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பலமுனை ஆதரவை வழங்கியுள்ளது.

இது பல்வேறு மருத்துவமனைகள், இலங்கையில் உள்ள இந்திய சமூக அமைப்புகள் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட பல நிறுவனங்களின் சுயாதீன முயற்சிகளால் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மூலம்: india news network)

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...