இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசுக்கு சொந்தமான அனைத்து நிலங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிலங்களும் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.