கடத்தப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சிறுமி: 08 நாட்களுக்குப் பின்னர் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டார்!

Date:

லுனுகல பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவ காப்புக்காட்டில் மறைத்து வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க காப்புக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் லுணுகல மற்றும் பேருவளை பிரதேசங்களில் வசிக்கும் 18 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் சிறுமியையும் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததன் பின்னர், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக லுனுகல வைத்தியசாலையின் வைத்தியர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடத்தப்பட்டதாகவும் லுணுகல பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் பசறை மற்றும் லுணுகல முகாம்களில் இந்த கூட்டுச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...