கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு: சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு கௌரவம்

Date:

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு கடந்த 30 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது பிரதேச செயலாளராக இருந்து சாய்ந்தமருது மண்ணுக்கு வேற்றுமைகள் பாராது தம் பணியை செவ்வனே செய்து அரும்பணியாற்றிவரும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அவரது சேவையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, ஊடகத்துறையில் தன்னலம் பாராது சிறந்த பணியாற்றிவரும் ஊடகவியலாளருக்கான விருது வழங்கலில் இவ்வருடத்தின் (2022) “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது” மெட்ரோ லீடர் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், ஊடகவியலாளரும், பல்துறைக்கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு, ஓய்வு பெற்ற அதிபரும், சமூக செயற்பாட்டாளரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான எம்.பி. அப்துல் ஹமீத், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல் நசார், நிந்தவூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எஸ்.ஜாரியா, இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர் ஏ.ஆர்.றிஸ்வானுல் ஜன்னாஹ் ஆகியோர் துறை சார்ந்து அவர்களது சேவையைப் பாராட்டி இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு இளைஞர் அமைப்பின் பிரதித் தலைவர் எஸ்.எம். சம்சித் ஆண்டின் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதைப் பெற்றுக்கொண்டதுடன் நிகழ்வில், புதிதாக இணைந்து கொண்ட இளைஞர், யுவதிகள் பலருக்கும் அங்கத்துவம் வழங்கப்பட்டதோடு, கல்விமான்கள், புத்திஜீவிகள், அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிழக்கு இளைஞர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஓர் சிறந்த அமைப்பாகும்.

இந்த நிகழ்வுக்கு கிழக்கு இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.எம். முபாரக் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஏ.சாபீர், கிழக்கு இளைஞர் அமைப்பினது பிரதித் தலைவர் எஸ்.எம். சம்சித், உதவித் தலைவர் எம்.எஸ்.ஏ. ஹர்பான், தொண்டர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ரீ.எம்.பைசின், பொருளாளர் ஆர்.எம். தன்சீம், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ. ஆர்.எப். சிரோனி, பிரதிச் செயலாளர் எம்.ஐ.எப்.சஜ்னா, உதவித் தலைவர் பி.நிலூ, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.எப்.றிஸ்னா, பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். சலீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அறிவிப்பாளர் ஏ.எம். இன்ஸாப், நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...