‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய இந்த உத்தரவை இன்று (ஆகஸ்ட் 24) வழங்கிய கொழும்பு கோட்டை நீதவான் திலன கமகே, சந்தேகநபர்களை கையடக்கத் தொலைபேசிகள் கையளிக்கும் வரை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த தொலைபேசிகளை கையளித்ததன் பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.