சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது.
‘விசிட் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் சவூதி அரேபியர் ஒருவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு சுமார் 230 அமெரிக்க டொலர்களை செலவிடுகிறார்.
அந்த நிதித்திறன் காரணமாகவே சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் மீது இலங்கை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.