கனமழை மற்றும் பலத்த காற்று இலங்கையின் சில பகுதிகளை பாதித்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது, இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.
இலங்கையின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய பருவக்காற்றின் தீவிர மழை காரணமாக மத்திய மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன, பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு 1224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ‘சுமார் 330 குடும்பங்களைச்சேர்ந்த 1224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் இறந்துள்ளதாகவும், நான்கு பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு முழுமையாகவும் 168 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட இடங்களுக்கு 330 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்’ என தொண்டமான் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் நிதி உதவி, தேவைகள், உணவுப் பொருட்கள் அல்லது பள்ளிப் பொருட்களை வழங்க விரும்பினால், தயவுசெய்து இரத்தினபுரி, கண்டி அல்லது நுவரெலியாவில் உள்ள ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும் எனவும் அவர் கூறினார்.