சுமார் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன்

Date:

கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக நாற்பது அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனியார் மயமாக்கல் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் திறன் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது எனவும் அதற்காக அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது ராஜபக்ஷ மக்களின் குப்பைகளைக் கழுவும் குப்பை வண்டி என்பதால் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும்  லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...