தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்குமாறு வடிவேல் சுரேஷினால் கடிதம்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய அமைச்சின் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் எச்.ஜி.வசந்த குணவர்தன தொழில் அமைச்சின் செயலாளர்  ஆர்.பி.ஏ விமலவீர தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் சுஜித் சஞ்சய பெரேரா சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய வாழ்க்கை பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேதனத்தை 3250 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இக்கடிதத்தை ஏற்று உடனடியாக சம்பள நிர்ணய சபையினை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர்.

வழமை மாறாத சலுகைகள் உடனேயே வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதியாக இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...