நாவலப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது!

Date:

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும், உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.

ஆதலால், சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன், தங்களது உதவிகளை பண ரீதியாக மேற்கொள்ள விரும்புபவர்கள் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் அல்லது கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளை ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு அப்பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

அதன்படி
முஸம்மில் மௌலவி 077 706 9383,
முபாரக் ஹாஜி 075 731 4113,
பஸ்லி ஹாஜி 077 102 8771 ஆகியோரிடம் தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் உதவிகளை மேற்கொள்ள முடியும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...