பயங்கரவாதத் தடைச் சட்ட உத்தரவில் ஜனாதிபதி கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்: ஐ.நா.அறிக்கையாளர்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேரி லோலர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வௌ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், அவ்வாறு செய்வது ஒரு இருண்ட நாளாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...