பெருந்தொகை கொக்கைன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது!

Date:

சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...