கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித ஆண்டகைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பேராயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பில், பேராயர் இல்லத்தின் பேச்சாளர், அவர் தற்போது குணமடைந்து வருவதால், இன்றும் நாளையும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.