முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை பயங்கரவாத பட்டியல் சேர்த்தமை இலங்கைக்கு பிரச்சினையாக அமைய முடியும்- ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் அறிக்கை!

Date:

2009 இல் யுத்தம் முடிவடைந்ததாலும் மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததால் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொளளும் அதேவேளை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினரின் சிவில் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும் அவரது அரசும் இடம் வைக்கவும் கூடாது என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டும்.

சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்படும் சில செயற்பாடுகள் நாட்டுக்குள் தீவிரத்தன்மையை அதிகரிக்கச் செய்து மோதல்களுக்கு காரணமாக அமைந்து விடுமோ என நாம் அஞ்சுகின்றோம்.

அனைத்து மதத்தினரினதும் சாபமாக சிலரால் வர்ணிக்கப்படுகின்ற, நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தற்போது அவசரத் தேவையாக இருப்பது அனைத்து இனங்களினதும் ஒற்றுமையும் அனைத்து நாடுகளினதும் பொருளாதார ஒத்துழைப்புமாகும்.

ஆனாலும் வெளிநாட்டு அமைச்சு அதனது தகுதி வாய்ந்த அதிகரிகளினூடாக 2022 ஆகஸ்ட் 1ஆம் திகதிய பட்டியலிடலின் போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1999 இன் 1267ஆவது பிரேரணையை 2015 இன் 2253 உள்ளிட்ட பிரேரணைகள் உள்ளிட்ட இது தொடர்பில் பாதுகாப்பு சபை பின்னர் வெளியிட்ட 8 பிரேரணைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஏன்?

பாதுகாப்பு சபையின் பிரேரணைகளின் தெளிவான நோக்கம், முன்னைய தாலிபான் மற்றும் அதன் பின்னரான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி அளிப்பதனை கட்டுப்படுத்துவதாகும்.

எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கும் நிதி உதவி அளித்ததாகவோ அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்களாகவோ இலங்கையின் 6 அமைப்புக்கள் மற்றும் 156 இலங்கையர்கள் மீது எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

பாதுகாப்பு சபையால் முன்னர் தீர்த்து வைக்கப்பட்ட இந்த பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த சிவில் அமைப்புக்களில் எதுவும் அல்லது இலங்கையர் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் தாலிபான், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்புக்களுக்கு நிதி உதவி அளித்ததாக வெளிநாட்டு அமைச்சில் ஏதேனும் சான்றுகள் உண்டா?

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 2015 இல் 2253 பிரேரணையின் ஊடாக பிரேரணை இலக்காக கொள்ளும் அமைப்புக்கள் தெளிவாக இனம் காணப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். அல்கொய்தாவுடன் நெருங்கிய அமைப்புக்கள், நபர்கள், நிறுவனங்கள் என 2 ஆவது பிரிவிலும், பட்டியலிடப்படுவதற்கான அளவுகோல்கள் 3 ஆவது பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 6 முஸ்லிம் அமைப்புக்கள் 156 தனிநபர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பிருக்கின்றது என்பதுதான் வெளிவிவகார அமைச்சின் நிலைப்பாடா?

சர்வதேச சமூகத்தின் தனி நபர்கள், நாடுகளால் தடை செய்யப்பட்ட மற்றும் சேதமுண்டாக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையை தவறாக பயன்படுத்த இவை காரணமாக அமையுமா?

குற்றப்புலனாய்வுப் பிரிவு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன 2019.04.21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில், இலங்கையின் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தாவுக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என சாட்சி கூறியிருந்தார்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இவ்வாறான தொடர்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களின் மறுத்திருந்தது.

கிறிஸ்தவர்களின் தேவாலயம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது பொறுப்பு சுமத்துவதற்கு எடுக்கும் முயற்சியில் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தது. இந்த முயற்சி இல்லாத ஒரு தொடர்பை எடுத்துக்காட்டுவதற்காகும்.

ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 41 ஆவது பிரிவின் கீழ் என சொல்லப்பட்டு 2022 ஆகஸ்ட் 1 ஆம் திகதி பெயரிடபட்ட நபர்களின் பட்டியலிடல் செல்லுபடியற்றது என்பதோடு பல்வேறு காரணங்களால் அதற்கு எந்த சட்ட அதிகாரமும் இல்லை.

41 ஆவது பிரிவின் படி ஐக்கிய நாடுகளின் நோக்கமாவது நாடுகளுக்கிடையில் யுத்தம், மோதல்களை தவிர்ப்பதற்கேயன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அல்கொய்தாவுடன் சம்பந்தப்படாத நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இடையூறு விளைவிப்பதோ அவமானப்படுத்துவதோ அச்சுறுத்துவதோ அல்ல.

இது இரண்டாவது அத்தியாயத்திலும் 2015 இன் 2253 பாதுகாப்பு சபை பிரேரணையின் 3 ஆவது அத்தியாயத்திலும பட்டியலிடப்படுவதற்கான அளவுகோல் குறித்துரைத்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா அமைப்புக்கள் இரண்டுமே செத்து மடிந்தவை என்பதால் இவை பின் நாட்களில் புதுப்பிக்கப்படவில்லை.

இதற்கு மேலாக வர்த்தமானிப்படுத்தப்பட்ட ஒழங்கு விதிகளின் சில உறுப்புரிமைகள் சர்வதேச சட்டங்கள், இலங்கையின் அரசிலமைப்பு உறுப்புரைகள் மற்றும் பாதுகாப்பு சபையின் 2015இன் 2253 பிரேரணைகளுடன் முரண்படுகின்றது.

முஸ்லிம் அமைப்புக்ள் தனிநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளமையை விரைவாக மீள் பரிசீலனை செய்து செல்லுபடியற்றதாக்காவிடின் ஹேக்கில் சர்வதேச நீதின்றத்திலும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கீழும் கொழும்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவிலும் அது பிரச்சினைக்குரியதாக மாற முடியும்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...