பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான அடுத்த நான்கு மாதச் செலவுகளுக்கான விவாதத்தை செப்டம்பர் 30, 31, 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.