வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை: களுத்துறை, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

Date:

நிலவும் மழையுடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலை காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மழை சுமார் 100 மி.மீ கனமழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மலையக பிரதேசங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வாழும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் அவதானமாக இருக்குமாறும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...