ஸல்மான் ருஷ்தி தாக்கப்பட்டு வைத்தியசாலையில்!

Date:

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சாத்தானிய வசனங்கள் எனும் நூலை எழுதிய ஸல்மான் ருஷ்தி நியுயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வின் போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான ஸல்மான் ருஷ்தி நேற்று நியுயோர்க் நகர மண்டபமொன்றில் உரையாற்ற முற்படுகையில் ஹாதி மத்தார் என்பவரால் மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சிலும் வயிற்றிலுமாக கைகளால் குத்தப்பட்ட அவர் சுயநினைவற்ற நிலையில் மேடையில் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து விமான மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். நேற்று வரை அவருக்குச் சுய நினைவு திரும்பவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1980 களில் அவர் எழுதிய சாத்தானிய வசனங்கள் எனும் நூல் இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்வதாக ஈரானின் அப்போதைய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் கொமைனி அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் 10 வருடங்களாக தலைமறைவாகியிருந்தார். முஸ்லிம் உலகின் வெறுப்புக்குள்ளாகியிருந்த இவருக்கு பிரித்தானியா 2007 இல் சேர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஸல்மான் ருஷ்தி மீது தாக்குதல் மேற்கொண்ட நிவ் ஜேர்ஸியைச் சேர்ந்த 24 வயதான ஹாதி மத்தார் தனி நபராகவே செயற்பட்டிருந்கிறார் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள போதிலும் தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...