அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

Date:

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரி குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவையை மேலும் முறையாகவும் திறமையாகவும் உயர் மட்டத்தில் பராமரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள  பணியிடங்கள் மற்றும் மிகுதிகளைக் கணக்கிட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சமப்படுத்தப்படும்.

இதேவேளை கடந்த காலங்களில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார்  60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...