ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி ரிட் மனு தாக்கல்

Date:

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தன்னை சந்தேகநபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீசை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியை சந்தேக நபராக பெயரிட்ட கோட்டை நீதவான் நீதிமன்றம், 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மைத்திரிபால சிறிசேனவை உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களில் மைத்திரிபாலவை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடுமாறு கோரிய தனிப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சிறில் காமினி பெர்னாண்டோவினால் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...