காஜிமாவத்தை தீ விபத்து சேதத்தை பார்க்க வந்த முஜிபுருக்கு மக்கள் எதிர்ப்பு!

Date:

கொழும்பு தொட்டலங்க, காஜிமாவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தற்காலிக குடிசை வீடு ஒன்றில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பார்வையிட சென்றுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் தமது வீடுகளை இழந்த தமக்கு நீதி வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தீயினால் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...