சீன சிச்சுவான் மாகாணத்தில் நில அதிர்வு: 46 பேர் உயிரிழப்பு!

Date:

சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (5) நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

சீனாவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாரிய அணைக்கட்டுக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 40 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...