சுற்றுலா மற்றும் கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

Date:

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல்  இன்று (14) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான நேபாள தூதுவர்  பசு தேவ் மிஸ்ரா கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது இரு நாட்டு இளைஞர்களும் பல்கலைக்கழக கல்வி மற்றும் சுற்றுலாத் துறை வாய்ப்புகளில் இணைவதற்கு இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நேபாள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

200மி.மீ பலத்த மழை: அதிக மழை வீழ்ச்சி கம்பஹாவில்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி...

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...