நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி கெமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் கைதிகளால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளன.

சிறைச்சாலைக்குள் பின்பற்றப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமென கண்டறியப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமாக சில கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 700 கைதிகள் வரை போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர்...

42வது மீலாதுன் நபி தேசிய விழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற “Welcome to Our Mosque” நிகழ்ச்சித்திட்டம்

42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை...