பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த மாணவன்!

Date:

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் இணையத் தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலியைச் சேர்ந்த சந்தேகநபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐடி மாணவர்களைக் கொண்ட 5000 உறுப்பினர்களைக் கொண்ட தனியார் டெலிகிராம் குழுவில் இணையதள போர்டல் மற்றும் ஹேக்கிங் குறித்த வழிமுறைகளை மாணவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் இணையப் போர்ட்டலை ஹேக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டெலிகிராம் குழுவிற்கு அவர் அறிவித்ததையடுத்து, அவர் புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...