பாகிஸ்தான் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது இலங்கை!

Date:

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெத்தும் நிசங்கவின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இவ்விரு அணிகளும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...