பேராசான் மர்ஹூம் தௌபீக் சேர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

அன்மையில் மறைந்த தௌபீக் சேர் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் எம். ஏ. எம். எம். அஸ்மிர் தலைமை தாங்கினார்.

நிகழ்வின் ஆரம்பத்தின் தௌபீக் சேர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பாடசாலையின் பழைய மாணவர் சகோதரர் இஸ்மாஈல் சியாஜ்  முன் வைத்தார்.

மேலும்,  நிகழ்வில் தௌபீக் சேர் தொடர்பான நினைவுகளையும் அனுபவங்களையும் அவரோடு சம காலத்தில் பணியாற்றிய அஜீன், புஹாரி ஆசிரியர்கள் முன் வைத்தனர்.

பழைய மாணவர்கள் சார்பாக சகோதரர் நாஸிக் மற்றும் பரீஷா தௌபீக் ஆகியோர் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

அதேவேளை நிகழ்வில் சகோதரர் மஸாஹிரின் பாடலொன்றும் வைத்தியர் மிப்ராஸ் ஷஹீதின் கவிதையொன்றும் இடம் பெற்றது.

சபையோருக்கான நேரத்தில் அன்ஸார், மிஹ்ளார், நஹாஸ் மற்றும் முஹம்மத் ஆசிரியர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இறுதியாக தௌபீக் சேர் அவர்களின் மூத்த புதல்வரின் ஏற்புரை இடம் பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சகோதரர் அர்பகான் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை சகோதரர் அஹ்ஸன் ஆரிப் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...