மத வழிபாட்டுத் தலங்களில் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியாது: எரிசக்தி அமைச்சர்

Date:

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இல்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (20) பாராளுமன்றத்தில் மதஸ்தலங்களில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரச் சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், ஏனைய மின்சாரத் துறைகளின் கீழ் அதற்கான செலவை ஈடுகட்டுவதாகவும், இம்முறை மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அந்த முறையிலிருந்து விலகிச் சென்றதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அதன்படி, விகாரைகளுக்கும் ஏனைய மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் சூரிய சக்தியிலான மின் உற்பத்தி முறைமையை பயன்படுத்துவதற்கு திட்டமொன்றை வகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பேனல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த அமைச்சரிடம் கையளித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, கடன் முறையின் கீழ் சோலார் பேனல்களைப் பெறுவதற்கு சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...