முதலைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் அம்பாறை மாவட்டம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.

தற்போது மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.மேலும் தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது. இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மேலும் இவ்வருடம் ஜுன் மாத பகுதியில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...