வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொதுவெளியில் தோன்றினார் சீன ஜனாதிபதி!

Date:

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதன்முறையாக பொது வெளியில் தோன்றி, தான் வீட்டுக்காவலில் இருப்பதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று (செப். 27) நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் சீன ஜனாதிபதி பங்கேற்றதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்குப் பிறகு செப்டெம்பர் நடுப்பகுதியில் அவர் சீனாவிற்கு வந்த பிறகு இதுவே அவரது முதல் பொதுத் தோற்றமாகும்.

வடக்கு எல்லையில் சீனப்படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது.

சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் திகதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள இராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன இராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...