விமல் தலைமையில் புதிய கூட்டணி உருவானது!

Date:

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து, ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ஸ தலைமையில்  இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

கூட்டணியில் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, செயலாளராக விமல் வீரவன்ச. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணியின் தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர்  ஹெல உறுமயவின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிரதித் தலைவர்களாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறிவிக்கப்பட்டுள்ளார்.

அங்குரார்ப்பண மாநாட்டிற்கு வருகைதந்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க வரவேற்றதுடன், பின்னர் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் சுதந்திரக் கட்சி ஒன்றிய தலைவர்கள் கையொப்பமிட்டனர்.
இருக்கிறது அதன்பின், கூட்டணியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...