கால்பந்து சுற்றுபோட்டியில் கஹட்டோவிட்ட எப்.சி அணிக்கு வரலாற்று வெற்றி!

Date:

Gold கிண்ணத்துக்கான கால்பந்து சுற்றுபோட்டியின் லீக் ஆட்டத்தில் திஹாரி யூத் (Thihariya Youth) அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கஹட்டோவிட்ட எப்.சி (Kahatowita FC) அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் இந்த போட்டிகள் இடம்பெற்றது.

மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய KFC அணிக்கு ஆட்டம் தொடங்கிய முதல் பத்தாவது நிமிடத்தில் அறிமுக வீரர் அம்மார் பெற்றுக்கொடுத்த கோல் வெற்றிப் பாதையை இலகுவாக்கியது.

திஹாரி யூத் அணி எவ்வளவு முயற்சி செய்தும் முதல் பாதி 1-0 ரீதியில் நிறைவு பெற்றது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற மனோபாவத்துடன் விளையாடினாலும்  அணியால் போட்டியை சமன் செய்ய முடியவில்லை.

பிரதேச அணி ஒன்று Super league விளையாடிய அனுபவம் உள்ள திஹாரி யூத் அணியை வெற்றி கொண்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...