அரச துறையில் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Date:

அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனவே, அரசு நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் 2020 இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது.

எனினும் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையில் உள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும் என அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...