புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாகவும், 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் இடமாற்ற சபையின் தீர்மானங்கள் வழங்கப்படும்.
அதுவரை புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.