ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 21 பேர் உயிரிழப்பு, 21 பேர் படுகாயம்!

Date:

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின் போது இன்று (02) இடம்பெற்ற வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுதாரி இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான முஜிப் அன்சாரியை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஹெராத் நகரில் உள்ள குசர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று (செப். 2) மதியம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த வாரம், இஸ்லாமியர்கள் அங்கு சிறப்புத்தொழுகை மேற்கொண்டு வந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஹெராத் நகரின் அவசர உதவி மையத்தைச் சேர்ந்த அலுவலர், முகமது தாவூத் முகமதி தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தாலிபன் அலுவலர்கள் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழப்புகள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்னர், ஆப்கனில் தாலிபன்களை குறிவைத்து பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று வந்தன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற பள்ளிவாசலில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் தொழுகை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் ஆதிக்கம் வாய்ந்தவர்களாக சன்னி இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். தாலிபன்களும், ஐஎஸ் அமைப்பினரும் சன்னி இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன்கள் ஆப்கானை கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் அமைப்பு, பல்வேறு பள்ளிவாசல்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு சம்பவங்களையும், தற்கொலைப்படை தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளன

Popular

More like this
Related

4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட கொவிட் ஜனாஸா எரிப்பின் 6ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட, பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவு...

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு...

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...

நாளை முதல் வரட்சி வானிலையில் மாற்றம்

நிலவும் வரட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...